“கிரிவலம் போறோம் சேஷாத்ரி…”

ஒம் சத்குரு ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் திருவடிக்கே

சேஷாத்ரி…..சேஷாத்ரி….

கிரிவலம் போறோம் சேஷாத்ரி, கூட வருவாய் சேஷாத்ரி

கோழி கூவும் முன்னே சேஷாத்ரி, நம்ம கிளம்ப வேணும் சேஷாத்ரி

பக்த சமாஜம் சேஷாத்ரி உன்னை பற்றியே இருக்குது சேஷாத்ரி,

உன் பக்தனின் (Guruji) பக்தர்கள் நாங்கள் எல்லாம்,

உன்னை,.. தேடி  வந்தோம் சேஷாத்ரி

(சேஷாத்ரி, எங்கள் சேஷாத்ரி….

சேஷாத்ரி எங்கள் சேஷாத்ரி..

கிரிவலம் போறோம்…)

வேட்டிச் சட்டைத் துண்டு வாங்கி வந்தோம்

வேணாம்னு சொல்லாம வாங்கிக்கணும்

வீபுதி குங்குமம் இட்டுக்கிட்டு,

கிரிவலப்பாதையில் கிளம்பவேணும்

சேஷாத்ரி, எங்கள் சேஷாத்ரி….

சேஷாத்ரி எங்கள் சேஷாத்ரி..

கிரிவலம் போறோம்…)

பக்கத்திலே சேஷாத்ரி, பகவான் வீடு சேஷாத்ரி

பக்தியுடனே சேஷாத்ரி, நமஸ்காரம் செய்கின்றோம் சேஷாத்ரி

(சேஷாத்ரி, எங்கள் சேஷாத்ரி….கிரிவலம் பாதையில் சேஷாத்ரி)

காலை உதிக்கும் கதிரோனே, நீ மாலை மதியாய் மாறிடுவாய்

மாலையில் மலரும் மதியோனே, நீ காலை கதிராய் மாறிடுவாய்

(சேஷாத்ரி, எங்கள் சேஷாத்ரி….கிரிவலம் பாதையில் சேஷாத்ரி)

இந்திரலோகத்து இந்திரனே, வாயுவை சற்று அழைத்திடுவாய்

சேஷாத்ரி வலம்வரும் வேளை முன்னே,

கிரிவலப்பாதையை கூட்டிடுவாய்

(சேஷாத்ரி, எங்கள் சேஷாத்ரி….கிரிவலம் பாதையில் சேஷாத்ரி)

இந்திரலோகத்து இந்திரனே,வருணனை சற்று அழைத்திடுவாய்

சேஷாத்ரி வலம்வரும் வேளை முன்னே,

பன்னீர் தெளிக்கப் பணிதிடுவாய்

(சேஷாத்ரி, எங்கள் சேஷாத்ரி….கிரிவலம் பாதையில் சேஷாத்ரி)

இந்திரலோகத்து இந்திரனே, சேஷாத்ரி வலம் வரும் நேரத்திலே

மஞ்சதேளிச்சு, கோலமிட்டு, வழியெல்லாம் அலங்காரம் செய்திடுவாய் 

(சேஷாத்ரி, எங்கள் சேஷாத்ரி….கிரிவலம் பாதையில் சேஷாத்ரி)

அஷ்டலிங்கம் சேஷாத்ரி, அங்கங்கே இருக்குது சேஷாத்ரி

கிரிவலப்பாதையில் சேஷாத்ரி, நம்ம சீக்கிரம் போவோம் சேஷாத்ரி

(சேஷாத்ரி, எங்கள் சேஷாத்ரி….கிரிவலம் பாதையில் சேஷாத்ரி)

கிழக்குப்பக்கம்  சேஷாத்ரி, இந்திர லிங்கம் சேஷாத்ரி

தொழுதே நின்றோம் சேஷாத்ரி நலம், வளம், அருள்வாய் சேஷாத்ரி

(சேஷாத்ரி, எங்கள் சேஷாத்ரி….கிரிவலம் பாதையில் சேஷாத்ரி)

தாமரை குளம் பக்கம் சேஷாத்ரி,அக்னி லிங்கம் சேஷாத்ரி

தொழுதே நின்றோம் சேஷாத்ரி, நோய் நொடி அழிப்பாய் சேஷாத்ரி

(சேஷாத்ரி, எங்கள் சேஷாத்ரி….கிரிவலம் பாதையில் சேஷாத்ரி)

தெற்கு பக்கம்  சேஷாத்ரி..எம லிங்கம் சேஷாத்ரி

தொழுதே நின்றோம் சேஷாத்ரி…..ஏழ்மை தீர்பாய் சேஷாத்ரி

(சேஷாத்ரி, எங்கள் சேஷாத்ரி….கிரிவலம் பாதையில் சேஷாத்ரி)

கொஞ்சம் நடந்தால் சேஷாத்ரி ..ராஜ லிங்கம் சேஷாத்ரி..

பக்த சமாஜம் சேஷாத்ரிஉன் பக்தனின் குழந்தை சேஷாத்ரி 

(சேஷாத்ரி, எங்கள் சேஷாத்ரி….கிரிவலம் பாதையில் சேஷாத்ரி)

சனி தீர்த்தம் பக்கம் சேஷாத்ரி, நிருதி லிங்கம் சேஷாத்ரி

தொழுதே நின்றோம் சேஷாத்ரிகஷ்டங்கள் களைவாய் சேஷாத்ரி……

(சேஷாத்ரி, எங்கள் சேஷாத்ரி….கிரிவலம் பாதையில் சேஷாத்ரி)

தூறல் தூவுது சேஷாத்ரி, அருள் மழை பெய்யுது சேஷாத்ரி

மேற்கே பாரு சேஷாத்ரிவருண தீர்த்தம் சேஷாத்ரி

(சேஷாத்ரி எங்கள் சேஷாத்ரி….கிரிவலம் பாதையில் சேஷாத்ரி)

பக்கத்திலே சேஷாத்ரி.வருண லிங்கம் சேஷாத்ரி

தொழுதே நின்றோம் சேஷாத்ரி….பிணிகளை அழிப்பாய் சேஷாத்ரி

(சேஷாத்ரி, எங்கள் சேஷாத்ரி….கிரிவலம் பாதையில் சேஷாத்ரி)

வட மேற்கில் சேஷாத்ரி… , வாயு லிங்கம் சேஷாத்ரி

தொழுதே நின்றோம் சேஷாத்ரி… 

….வரங்கள் கொடுப்பாய் சேஷாத்ரி 

(சேஷாத்ரி, எங்கள் சேஷாத்ரி….கிரிவலம் பாதையில் சேஷாத்ரி)

குபேரன் தொழுதான் சேஷாத்ரி, குபேர லிங்கம் சேஷாத்ரி

தொழுதே நின்றோம் சேஷாத்ரிவறுமை நீக்குவாய் சேஷாத்ரி

(சேஷாத்ரி எங்கள் சேஷாத்ரி….கிரிவலம் பாதையில் சேஷாத்ரி)

வட கிழக்கில் சேஷாத்ரிஈசான்ய லிங்கம் சேஷாத்ரி

தொழுதே நின்றோம் சேஷாத்ரி……பிறவி அறுப்பாய் சேஷாத்ரி..

எங்கள்…..பிறவி அறுப்பாய் சேஷாத்ரி 

(சேஷாத்ரி எங்கள் சேஷாத்ரி….கிரிவலம் பாதையில் சேஷாத்ரி)

கிரிவலம் வந்தோம்  சேஷாத்ரி, கூட வந்தாய் சேஷாத்ரி

பொழுது சாயும் முன்னே சேஷாத்ரிநாம் திரும்பிவிட்டோம் சேஷாத்ரி

பக்த சமாஜம் பக்தரல்லாம், நன்றி சொன்னோம்  சேஷாத்ரி

இப்போதும், எப்போதும், என்றென்றுமே, …

நீ, கூட இருப்பாய் சேஷாத்ரி

ஒரே ஒரு வரம் சேஷாத்ரி, மறுக்காமல் தருவாய் சேஷாத்ரி

இப்பாட்டை கேட்டாலும், பார்த்தாலும்,

சொன்னாலுமே கிரிவலப், பலன் தருவாய், சேஷாத்ரி

(சேஷாத்ரி  எங்கள்  சேஷாத்ரி….கிரிவலம் முடித்தோம்  சேஷாத்ரி)

சேஷாத்ரி  மகான்  சேஷாத்ரி….சேஷாத்ரி எங்கள் சேஷாத்ரி

ஶ்ரீ. சுந்தரராஜன் சுப்பிரமணியன், புது டெல்லி

August 2020
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

Follow Mahaan on Social Media!

%d bloggers like this: