Girivalam – Inner Path!

Om Sathguru Sri Seshadri Swamigal Thiruvadikkae


Girivalam – Inner Path!

அன்புள்ள சேஷ பக்தர்களுக்கும் என் சிஷ்யர்களுக்கும் நமஸ்காரம்.


இன்று காலை கிரிவலம் (giri-pradhakshinam) உள் பாதை (inner-path) வழியாக, காலை 6 மணிக்கு சேஷ பக்தர் திரு. சந்திர மௌலீஸ்வர் உடன், ஸ்ரீ ரமணாஸ்ரமம்  பின்புறம் வழியாக சென்றோம். அந்த பாதையில்  பஞ்சமுக தரிசனம் வரை (10 km ) செல்லலாம். மிகவும் கரடு முரடாக இருக்கும். ஏற்கனவே தனியாக 2 முறை சென்றுள்ளேன். ஒத்தையடி பாதை. சற்று இருட்டாக இருந்ததால் வழி மாறி விட்டோம். மழை பெய்து புதர்கள் நிரம்பி இருந்தது. அடையாள மார்க் தெரியவில்லை.உடன் அங்கிருந்த சிறு பாறையில் அமர்ந்து, ஓம் சத் குரு ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் திருவடிக்கே, என 5 நிமிடம் மந்திரம் ஓதினோம். மீண்டும் எழுந்ந்து சற்று தூரம் நடந்தோம். கிழக்கே பார்! சேஷாவின் குரல் ஒலித்தது ! என்ன ஆச்சரியம்.! அந்த காட்டில் ஒரு காலேஜ் மாணவர் நின்று கொண்டிருந்தார் , ஸ்ரீ சேஷன் வடிவிலே! வழி கேட்டோம். அவர் பெயர் கணேஷ்! நாங்கள் நின்ற இடமே (முன்னாள் புதர் இருந்ததால் தெரியவில்லை.) சரியான வழி என்றார்.ஆனால் புதரில்  குனிந்து வழி காட்டினார். ! பிறகு என்ன சேஷன் காட்டிய அடையாள  குறியுடன் கிரிவலம் முடித்தோம்.


நன்றி. வணக்கம்.
இப்படிக்கு

குருவும் சிஷ்யரும்
. 29.12.09.

Advertisements

October 2017
M T W T F S S
« Jan    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

Blog Stats

  • 18,085 hits